13வது குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல்
திருமதி பிரதிபா பாட்டீல் பாரதத்தின் 13வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சக போட்டியாளரான பைரோன்சிங் ஷெகாவத்தை விட இவர் 3,6,810 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். 72 வயதாகும் பிரதிபா பாட்டீல் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர் சட்டசபை உறுப்பினரானார். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர் எனப் படிப்படியாக அரசியல் ஏணியில் ஏறி இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com