வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்கிறது பழமொழி. உண்மை தான், பக்கத்தில் இருப்பவருக்குத் தொத்திக் கொள்ளுமல்லவா? அட, சிரிப்பைச் சொல்கிறோமய்யா.

நீங்களும் உங்கள் எழுத்தால் கிச்சு கிச்சு மூட்டலாம். கட்டுரை, கதை எந்த வடிவிலும் இருக்கலாம்.

உங்கள் மூளையில் உதித்திருக்க வேண்டும். தபாலில் முன்பக்கத்தில் காணப்படும் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சலில் thendral@tamilonline.com என்ற முகவரிக்கோ அனுப்புங்கள். தலைப்பில் 'Sirikka Sirikka' என்று அவசியம் குறிப்பிடுங்கள்.

*****


தந்தை: ஏண்டா சோமு, கிருஷ்ணன் கோவில் கோகுலாஷ்டமிக் கச்சேரியில் மாங்குடி மணி வயலினைக் கேட்கச் சொன்னேனே, கேட்டியா?

மகன்: ஓ! கேட்டேன்பா. அவர் தரமாட்டேன்னுட்டார்.

எஸ். மீனாட்சி. சிகாகோ

© TamilOnline.com