கணிதப்புதிர்கள்

1. ஒரு தந்தையின் தற்போதைய வயது அவரது மகனின் வயதைப் போல மூன்று மடங்கு. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவரது வயது மகனின் வயதைப்போல நான்கு மடங்காக இருந்தது. அப்படி யானால் மகனின் வயது என்ன, தந்தையின் வயது என்ன?
2. வரிசையாக நின்று கொண்டிருந்த மாணவர்களில் முதலிலிருந்து எண்ணினால் ராமு ஒன்பதாவது நபர்; கடைசியில் இருந்து எண்ணினால் 38-வது நபர். அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது?
3. 3, 6, 18, 72 -- அடுத்து என்ன எண் வரும்? அதற்கான விதிமுறை எண்ண?
4. ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த 60 மாணவர்களும் உடன் வந்திருந்த மற்ற அனைத்து சக மாணவர் களுடன் கை குலுக்கினர். எத்தனை கை குலுக்கல்கள் அங்கு நிகழ்ந்திருக்கும்?
5. இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 36. ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வரும் தொகை 6. ஒன்றோடு ஒன்றைப் பெருக்கினால் வரும் தொகை 315 என்றால் அந்த எண் என்னவாக இருக்கும்?
6. 12345678 x 9 + 9 =?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com