உளுந்து வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 5
மிளகு - 1 ஸ்பூன் (கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்)
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

சிறிதளவே தண்ணீர் சேர்த்து, உளுத்தம் பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த மாவில் பெருக்காயம், மிளகு மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து நன்கு கிளரவும்.

அடி கனமான வாணலியில் எண்ணையை விட்டு நன்கு சூடு படுத்தவும்.

எலுமிச்சை அளவு அரைத்த உளுத்தம் மாவை எடுத்து கையில் தட்டிக் கொள்ளவும். நடுவில் சிறிய துளை செய்து கொதிக்கும் எண்னையில் இட்டு பொரிக்கவும். இரு புறமும் பொன்னிறமாக மாறியவுடன் வாணலியிலிருந்து எடுத்து எண்ணையை வடிய விடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com