சுருதி மாறாத
இளம் பாடகி கமல்ஹாசன் மகள் சுருதி இப்பொழுது மீண்டும் செய்திகளில் தோன்றியுள்ளார். வினயன் இயக்கத்தில் ஜெய்சூர்யா - காவ்யா மாதவன் நடிக்கும் ‘என் மனவானிலே’ என்ற படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் மற்றொரு ஜாம்பவானான K.J யேசுதாஸ¤டன் சேர்ந்து பாடுவது என்பது இந்த இளம் பாடகிக்கு சவால் தான். பாடலுக்கு தனது குரல் மூலம் உயிரூட்டிய சுருதியின் முயற்சியைக் கண்டு பரவசம் அடைந்த இளையராஜா அவரைக் கட்டி அணைத்து தனது பாராட்டுக்களைத் தெரி வித்தார். இந்த புகழ் பெற்ற கலை ஜோடியின் வாரிசின் குரலின் நாம் மேலும் பாடல்களைக் கேட்போமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

தொகுப்பு: ரூபி

© TamilOnline.com