வின்னர் பிரசாந்த்
இயக்குனர் சுந்தர் C., மற்றும் பிரசாந்த் முதன்முறையாக "வின்னர்" என்ற படத்திற்காக இணைகிறார்கள். பிரசாந்தின் ஜோடியாக 'ஜெமினி' நாயகி கிரண் நடிக்கிறார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஆர்த்தி அகர்வால் ஒரு பாடல் காட்சியில் ஆட சம்மதித்துள்ளார். வடிவேலு, ஜெயகுமார், நிரோஷா, சுமித்ரா, ரியாஸ் கான் மற்றும் வில்லனாக அறிமுகமாகும் பிரதாப் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குவதோடு கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார் சுந்தர். இசை யுவன் சங்கர் ராஜா.

தொகுப்பு: ரூபி

© TamilOnline.com