ஃபைவ் ஸ்டார்
மணிரத்னத்தின் அடுத்த தயாரிப்பான "ஃபைவ் ஸ்டார்" படத்தை இயக்குவது கடந்த எட்டு வருடங்களாக அவரது உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி வரும் சுசி கணேசன். 48 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஷாஜி கைலாஷ், ஜெய்ராஜ் போன்ற முன்னணி மலையாள இயக்குனர்களோடு பணியாற்றிய ரவி வர்மன் முதன் முதலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் தமிழ் படம் இது. சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பரிசு பெற்ற முதல் இந்தியர் இவர் தான். கலை தோட்டா தரணி; எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.

அனுராதா ஸ்ரீராமை நாம் பாடகியாக அறிவோம். ஆனால் தனது கணவரும் வயலின் வித்வான் மற்றும் பாடகருமான ஸ்ரீராம் பரசுராமோடு ஜோடி சேர்ந்து முதன்முதலாக இசையமைபாளராக அவதாரம் எடுக்கிறார். பரசுராம் - ராதா என்ற பெயரில் இவர்கள் இசை அமைகின்றனர். பிரபல ஹிந்திப் பாடகி சுபா முட்கல் தனது முதல் தமிழ் பாட்டை இப்படத்தில் பாடுகின்றார்.

தொகுப்பு: ரூபி

© TamilOnline.com