காதல் கிசுகிசு
P. வாசு நடிப்பதை ஒத்திப்போட்டுவிட்டு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கிறார். தனது சொந்த நிறுவனமான சூப்பர்ஸ்டார் ஆர்ட் மூவீஸ் சார்பாக தான் தயாரிக்கும் படமான 'காதல் கிசுகிசு"வை இயக்குகிறார் P. வாசு. புதுமுகம் பாலா கதாநாயகனாக நடிக்க, T. ராஜேந்தரின் "காதல் அழிவதில்லை"ப் படக் கதாநாயகி சார்மி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். விவேக், மணிவண்ணன், மயில்சாமி, கருணாஸ் மற்றும் மனோசித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை வசனம் P. வாசு; இசை வித்யாசாகர்; "காதல் காட்சி இல்லாத காதல் கதை" என்ற வாசகத்தை விளம்பரங்களில் பயன்படுத்துகிறார்கள்.

-

© TamilOnline.com