சொக்கத்தங்கம்
விஜய் - சந்தியா நடித்த 'தமிழன்', ஷாம் - சினேகா நடித்த 'ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே' ஆகிய படங்களின் மூலம் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு படத்தயாரிப்பில் மீண்டும் ஈடுபட்டது G.V ·பிலிம்ஸ். இயக்குனர் பாக்கியராஜ், விஜய்காந்த் முதன்முதலாக இணையும் 'சொக்கத்தங்கம்' படத்தை தற்போது தயாரிக்கின்றது இந்நிறுவனம். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இக்கதையில் விஜய்காந்தின் தங்கையாக நடிக்கிறார் உமா. விஜய்காந்திற்கு ஜோடியாக நடிக்கிறார் செளந்தர்யா. நகைச்சுவை விருந்து படைக்க மீண்டும் இணைகிறார்கள் கவுண்டமணியும் செந்திலும். 'வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்திற்குப் பிறகு மூன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் இயக்க வந்துள்ளார் பாக்கியராஜ். இசை தேவா; ஒளிப்பதிவு M.V. பன்னீர்செல்வம்; எடிட்டிங் மோகன்; கலை சந்தானம்; பாடல்கள் பா. விஜய், R.V. உதயகுமார். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com