வழக்கத்திற்கு மாறாக
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் - இயக்குனர் பாலு மகேந்திரா. ஜெய்ராம், ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கும் இவரது படத்தின் பெயர் 'ஜூலி கணபதி'. இந்தக் காதல் - திகில் படத்திற்கு இசை இளையராஜா. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் சிக்மகளூர் மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டன. வழக்கமான மசாலாதனத்தை என்றுமே கடைபிடிக்காதவர் பாலு மகேந்திரா. இவரது சில படங்களில் ஆங்கிலப் படங்களின் சாயல் இருந்தாலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தந்தவர். ரசிகர்களுக்கும் வித்தியாசமான விருந்து தானே!

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com