டிசம்பர் 2002 : குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக:

2. வீட்டுக்காரருக்குக் கொடுக்கப்படும் குடம் இடையைச் சுற்ற வென்றோர் சூடுவது (3)
5. சங்கத் தலைவர் நூலாடை போர்த்தி வர கவனமின்மை (4)
6. சுவட்டில் இனிய வால் துப்பு (4)
7. காற்றில் தலையில்லாமல் பெற்றவன் உயிர் போகாதிருக்க உதவு (5)
9. ஓட்டை போட நச்சரி (2)
10. தீச்செயல் செய்பவனை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்து (2)
12. ஆறாம் சுரம் வில் கொண்டு சிவா திரும்ப மேளங்கொட்டு (3, 2)
14. தீர்மானிக்காமல் யோசிக்க வெளியே பொன்னாலான ஐயர் இடை(4)
15. ஒரு மாதம் ஒரு பாகம், இனி பாதி (4)
16. முக்கால்வாசி தோண்டக் கிடைத்த அரிய பொருள் பெண் (3)

நெடுக்காக:

1. மேற்சென்று காக்க சத்திர வாசல் என்றும் இனிமை குன்றா (4)
2. காற்றோடு வந்த மணம் (2)
3. நழுவவிடுதல் தகை கலந்து இடைவிட்டு வறுத்தல் (1, 5 )
4. அஞ்சி யமன் தலையிட வெளியே உதைத்து விளையாடுவது (4)
8. தக்க பாதை ரகுவம்சம் தொடங்க குருவம்சம் அழிந்ததைக் கூறும் (6)
11. வீண் காயம் தலை போக சூரியன் மேலெழுவான் (4)
13. புசிக்கும்போது உள்ளே மாட்டும் (4)
15. பூண்டின் ஒரே துண்டு மகிழ்ந்தவன் வாயை நிறைக்கும் (2)

வாஞ்சிநாதன்
vanchi@vsnl.net

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:2. வாடகை 5. அசட்டை 6. தடயம் 7. காப்பாற்று 9. துளை 10. பாவி 12. தவில் வாசி 14. தயங்க 15. பங்குனி 16. தையல்
நெடுக்காக:1. கசக்கா 2. வாடை 3. கை தவறுதல் 4. பயந்து 8. பாரதக்கதை 11. விரயம் 13. சிக்கும் 15. பல்

© TamilOnline.com