கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக்
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
நெய் - 3/4 கப்

செய்முறை

முதலில் வாணலியில் நெய்யை விட்டு நன்றாக காய்ச்சவும்.

நெய் நன்றாக உருகியதும் கடலைமாவு சேர்த்து நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.

நன்கு வெந்தவுடன் மாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தில் சர்க்கரையும், அது கரையும் அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கெட்டிபாகு வரும் வரை கிளறவும். அடுப்பை மெல்ல சிறியதாக வைத்து கிளறவும்.

நல்லபாகு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

பின்பு சர்க்கரைபாகுவுடன் வறுத்து வைத்துள்ள கடலைமாவை கொட்டி அதில் ஏலக்காய் பொடி (ஒரு சிட்டிகை) போட்டு கைவிடாமல் நன்றாக கிளறவும். இப்போது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். அதில் கடலைமாவு, சர்க்கரை பாகு ஆகியவற்றை கொட்டி ஆறியபின் துண்டுகள் போடவும்.

ராஜலட்சுமி ஸ்ரீதரன்

© TamilOnline.com