ஆலிவ் ஆயில் கேக்
தேவையான பொருட்கள்
முட்டை - 2
சர்க்கரை (பொடி செய்தது) - 1 கப்
Extra-virgin ஆலிவ் ஆயில் - 3/4 கப் (12 அவுன்ஸ்)
பால் - 10 அவுன்ஸ்
ஆரஞ்ச் எசென்ஸ் - 1 ஸ்பூன்
·பிரெஷ் ஆரஞ்ச் ஜுஸ் - 1/8 கப்
துருவிய ஆரஞ்சு தோல் - 3 ஸ்பூன்
மைதா - 1 3/4 கப்
பேகிங் சோடா - 1 ஸ்பூன்
பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
மிக்ஸட் பருப்புகள் (முந்திரி, பிஸ்தா, பாதாம்) - 1/2 கப்

செய்முறை

Ovenஐ 350 டிகிரி Fக்கு சூடு படுத்தவும். கேக் பேனின் (cake pan) அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டின் மீது சிறிதளவு வெண்ணையைத் தடவவும். பின்னர் இதன் மீது லேசாக மைதாவைத் தடவவும். மைதா அதிகமாக இருக்கக்கூடாது.

மைதா, பேகிங் சோடா, பேகிங் பவுடர், உப்பு ஆகியவற்றைக் கலந்து சலித்தெடுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, ஆலிவ் ஆயில், பால், ஆரஞ்ச் எசென்ஸ், ஆரஞ்ச் ஜுஸ், துருவிய ஆரஞ்ச் தோல் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

சலித்த மாவை இதில் சேர்த்துக் கிளறவும். துண்டு செய்யப்பட்ட மிக்ஸட் பருப்புகளைச் சேர்த்துக் கிளறவும்.

இந்தக் கலவையை கேக் பேனில் கொட்டி நிறவி விடவும் (கேக் பேனை மெதுவாக தட்டித் தட்டி நிறவவும்). ஸ்பூன் கொண்டு நிறவக்கூடாது.

Ovenல் வைத்து bake செய்யவும். ஒரு டூத் பிக்கை எடுத்து கேக்கின் நடுவில் சொருகி எடுத்தால் டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல் இருக்கும் வரை bake செய்யவும்.

பின்னர் எடுத்து ஒரு சில மணி நேரங்கள் ஆறவைத்து பின்னர் கட் செய்யவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com