நீங்காத நினைவுகள்
சின்ன சின்ன ஆசை சிறுவயது முதல் ஆசை நீர்வீழ்ச்சியில் ஜோ வென கொட்டும் நீர் ஓசை கேட்க ஆசை, நயாகரா நீர் வீழ்ச்சியை காணும் நாள் வந்ததும் களிக்க மிக ஆசை பத்து வயதில் படித்த பாடத்தில் ஏற்பட்ட ஆசை ஆறுபது வயதில் நேரில் கண்ட ஆனந்தம்; கண்டேன் நயாகரா நீர்வீழ்ச்சியை கொண்டேன் ஆனந்தம்; கோடை காலம் கொளுத்தும் வெயில் ஜூலை மாதம் ஜாலியாக; கோட்டு வேண்டாம் சூட்டு வேண்டாம் குல்லாய் ஸ்வெட்டர் வேண்டாம்; குடும்பம் குழந்தைகளுடன் குதூகலமாக கார்சவாரி சென்றடைந்தேன்; பொடி நடைநடந்து வரிசையில் நின்று டிக்கட் பின்னர் படகு சவாரி; நீலமழை கோட்டுடன் படகுசவாரி நீண்ட நாள் ஆசை நிறைவேறி, நீலவானில் பகலவன் கிரணம், பட்டு எங்கும் பளபளக்க படகு ஆசை; நீரில் நனைந்த நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதம்மா

நீர்விழ்ச்சியின் 'ஜோ'' சத்தம் அம்மம்மா ஆனந்தம்; ஹரிக்கேன் டெக்கில் எறியதும் ஹிருதயம் ''பக் பக்'' வென அடிக்க, ஸிஸ்டர் லேக்கின் சிங்கார எளிய ஓட்டம் கண்ணை கவர, கங்கை, காவேரியில் மூழ்கி எழுந்த எண்ணங்களுடன்; ஏரியின் தண்ணீரை தலையில் தெளித்து கொண்டோமம்மா; இயற்கையின் வினோதம்தான் என்னே! இனிய சந்தர்ப்பத்தை அளித்த இறைவா! நீங்காத நினைவுகளுடன் நின்னை வணங்குகிறேன்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com