மிளகு குழம்பு பொடி
குழந்தை பிறந்ததும் தாய்க்கு பத்திய சமையல் உணவு தயாரித்து கொடுக்கும் பொழுது முக்கியமாக மிளகு குழம்பு கொடுக்கப்படும். குளிர்காலத்தில் மிளகு காரம் உடல்சூட்டை அதிகப்படுத்துவதால் குளிருக்கு இதமாய் இருக்கும். மிளகு குழம்பு பொடி இருந்தால் மிளகு குழம்பு நிமிடங்களில் தயாரிக்கலாம்.

தேவையான சாமான்கள்
தனியா - 1 கரண்டி
பெருங்காயம் பொடி - 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2-6
மிளகு - 1/4 கரண்டி
புளி - எலுமிச்சம் பழம் அளவு
துவரம் பருப்பு - 1/2 கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 கரண்டி
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1பிடி
வெல்லம் - 1 சின்னகட்டி

செய்முறை

புளி, வெல்லம் தவிர மற்ற சாமான்களை எண்ணெய்யில் வறுத்து பொடி செய்யவும். புளி ஈரமாக இருந்தால் வெறும் வாணலியில் சூடு செய்யவும்.

புளி, வெல்லம் இவற்றையும் உப்பு சேர்த்து பொடி செய்யவும்.

குழம்பு தயாரிக்கும் பொழுது வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து கொட்டி, மஞ்சள் பொடி போட்டு 2 ஸ்பூன் பொடியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்ததும் இறக்கவும்.

மைதிலி துரைசுவாமி

© TamilOnline.com