மாட்டுப் பொங்கல் - ஆந்திரா கத்திரி
தேவையான சாமான்கள்
இந்திய கத்திரிக்காய் - 0.516
வெங்காயம் - 1சிறியது
பூண்டு - 4 பல்லு
கொத்தமல்லி - 1 பிடி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 1 1/2 கரண்டி
சீரகம் - 2 ஸ்பூன்
வெல்லம் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4-6
மஞ்சள் பொடி - 1.5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், பூண்டு, வற்றல் மிளகாய், பாதி அளவு புளி இவற்றை வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைக்கவும். நீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.

கத்திரிகாயை நன்றாக கழுவி வாய் பிளந்து அரைத்த மசாலாவை அடைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கத்திரிகாயை போட்டு எண்ணெய் பரவ வதக்கவும்.

மூடி வைத்து அடுப்பை மிகவும் நிதானமாக எரியவிட்டு 5-10 நிமிடங்கள் வேக விடவும். காய் வெந்ததும், மீதி உள்ள புளியை வெந்நீரில் கெட்டியாக கரைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கத்திரிகாயில் ஊற்றவும். சேர்ந்தாற் போல் ஆனதும் பொடி செய்த வெல்லம் போடவும். இறக்கி வைத்து கொத்தமல்லி போடவும்.

காரம் தேவையானால் புளியோடு காரப்பொடி சேர்க்கலாம்.

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள குறிப்பாக குளிர்காலத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com