ரசிகர்களுக்காக கொடி அமைக்கும் நடிகர்கள்
படங்களில் நடிப்பதிலும், அரசியலில் ஈடுபடுவதிலும் ரொம்ப பிஸியாக இருக்கும் நடிகர் சரத்குமார் தன் நடிப்பையும், அரசியலையும் தனித்தனியாக பிரித்து தன் நடிப்புக்காக, தன் ரசிகர்களுக்காக புதிய கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

திடீரென்று 'இது என்ன கலாட்டா' என்று அவரிடம் கேட்டால், ''நான் திமுகவை சேர்ந்தவன் என்றாலும் என் ரசிகர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்.. நான் என்னுடைய ரசிகர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்... அதன் விளைவே ரசிகர்மன்ற கொடி'' என்றார்.

விஜயகாந்தும் தன் ரசிகர்களுக்காக தனிக்கொடி அமைத்திருக்கிறார். தன் ரசிகர்களை தன்னுடைய திரைப்படங்களில் நடிக்கவும் வைத்துள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com