சிஷ்யன் படத்தில் பாக்யராஜ்
கிராமியச்சூழலில் முரளி, பூனம் இருவர் நடிப்பில் நாகர்கோவில் அருகில் படத்தயாரிப்பு நடைபெற்று வரும் படம் 'ஒளி' . படத்தை டைரக்ட் செய்பவர் ஒளிச்சந்திரன். 'ஒளி'மயமான இந்தப் படத்தில் டைரக்ஷன் மட்டுமல்லாது கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என்று அனைத்தையும் செய்கிறார் அவர். 'என்ன நீங்க டி.ராஜேந்தர்கிட்ட வேலை பார்த்தவரா?' என்று கேட்டால், ''நான் பாக்யராஜ் சிஷ்யன்'' என்று பதில் வருகிறது. 'ஒளி'யில் தன் குருநாதர் பாக்யராஜ்க்கு முக்கியமான பாத்திரம் ஒன்றை கொடுத்து அவருக்கும் ஒளியேற்றியுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com