ஒரு தாயின் தனிமை
காலைத்தென்றலின் தழுவல் சுகம்
காதுவழியே வந்த கானம் சுகம்

மொட்டின்மேல் பனித்துளி சுகம்
மொட்டைமரத்தின் ஒற்றை இலையும் சுகம்

குழந்தையின் முத்தஈரம் சுகம்
கூடவே வந்த தோழியின் ஆறுதல் சுகம்

பட்டாம்பூச்சியின் வண்ணம் சுகம்
பறக்கஇயலா குட்டிப் பறவையும் சுகம்

கோதிவிடும் கைகள் சுகம்
கோடைக்கால மழைச்சாரல் சுகம்

அழும் குழந்தையின் சிணுங்கல்கூட சுகம்
அமெரிக்காவில் மகனும் சுகம்

ஆனாலும் இங்கே -
ஜன்னல் வழியே தூரத்தில்
தனியாய் ஒரு ஒற்றை மேகம்

விஷ்வா

© TamilOnline.com