லேடீஸ் மேக்னட்
எடுப்பான தோற்றத்தோடும், குறுகுறு கண்க ளோடும், 'லேடீஸ் மேக்னெட்' என்ற செல்லப் பெயரோடும் தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வரும் மாதவன் இப்போது கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார். 'அன்பே சிவம் படத்தில் இவரது நடிப்பு, இவரை மேலும் பிரபலப்படுத்தியிருப்பதால், கமலஹாசன் எழுதி, மெளலி இயக்கத்தில் ராஜ்கமல் ·பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம். அதிகம் படித்திராத பிராமின் இளைஞனுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அங்கே அவர் அடிக்கும் லூட்டிகள் தான் படத்தின் கதை. அந்த இளைஞன் கதாபாத்திரத்தில் தான் மாதவன் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்குப் பொருத்தமான ஜோடியை இன்னும் தேடி வரு கிறார்கள்.

தொகுப்பு: க.காந்திமதி

© TamilOnline.com