கதையைத் தேடி...
எதிர்பாராதவிதமாக பாபா படம் தோல்வி யடைந்ததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்தபிறகுதான் சினிமாவிலிருந்து வேறு துறைக்கு மாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் ரஜினிகாந்த். இரவுபகல் பார்க்காமல் நல்ல கதையைத் தேடி வருகிறார். தானே நல்ல கதையைத் தேர்வு செய்து, அதை கே.எஸ். ரவிக்குமாரை வைத்து இயக்கி அதில் நடிக்கப்போகிறாராம். அதற்காகக் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார் நடித்து வெற்றிப்படமான 'தவிரங்கி பாத்தங்கி' என்ற கன்னட படத்தை கர்நாடகா சென்று பார்த்திருக்கிறார். அவரது உயிர்நண்பர் மோகன்பாபுவும் அவருடன் சென்றிருக்கிறார். படத்தின் கதை அருமையாக இருந்தாலும், தன் வயதிற்கு அதில் நடிப்பது ஒத்துவராது என்று தானே சரியாக முடிவு செய்து அதைத் தன் நண்பருக்குப் பரிந்துரை செய்து விட்டு, வேறு எங்காவது நல்ல கதை கிடைக்குமா என்று மீண்டும் வலை வீசத் தொடங்கிவிட்டார்.

தொகுப்பு: க.காந்திமதி

© TamilOnline.com