நினைவிருக்கிறதா நிரோஷாவை...
ராதிகா சின்னத்திரையில் ஆழமாகக் காலூன்றியதைத் தொடர்ந்து அவரது தங்கை நிரோஷாவும் அதே இடத்திற்கு வர பெரிதும் முயற்சி செய்து ஒன்றிரண்டு தொடர்களில் நடித்தார். ஆனால், பாவம் ராதிகா அளவுக்கு நிரோஷாவுக்கு சின்னத்திரையிலும் வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது திரை வட்டாரத்தில் மீண்டும் இவரது பெயர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நிரோஷா. ஏ.வி.எம். நிறுவனத்துக்காக இயக்குநர் விக்ரமன் இயக்கும் 'ப்ரியமான தோழி' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு மகனாக நடிப்பது யார் தெரியுமா? மாதவன் தான். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் திரையில் இந்த அம்மாவும் மகனும் எப்படி இருப்பார்கள்...?

தொகுப்பு:யாமினி

© TamilOnline.com