ஹாலிவுட்டுக்குச் செல்கிறது வித்யாசாகரின் இசை
ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க வித்யாசாகருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராஜிவ் அஞ்சல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் பெயர் 'Beyond The Soul'. வித்யாசாகரையும் இன்னும் இரு தொழில் நுட்ப கலைஞர்களையும் தவிர இந்தப் படத்தில் பணி செய்யும் அத்தனை பேருமே ஹாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்தான். சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வகையில் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிட்ட மோகன்லால் நடித்த 'குரு' என்ற மலையாளப் படத்தை இயக்கியவர் ராஜிவ் அஞ்சல். இவர் தற்செயலாக ஒரு முறை விமான நிலையத்தில் வைத்து வித்யாசாகரைச் சந்தித்திருக்கிறார். அப்போதுதான் இந்த ஹாலிவுட் படத்திற்கான ஒப்பந்தம் நிகழந்திருக்கிறது. இசையமைப்பாளர் வித்யாசாகர் ஹங்கேரிக்குச் சென்று இந்தப் படத்தில் பயன்படுத்துவதற்கு அங்கு ஏதாவது சிறப்பு வாத்தியக் கருவிகள் கிடைக்குமா என்று தேடி வந்திருக்கிறார்.

யாமினி

© TamilOnline.com