கமல் எழுதும் கதையின் கதாநாயகி!
கமல் கதை, திரைக்கதை எழுதும் 'நளதமயந்தி' திரைப்படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிப்பது ஏற்கனவே வந்த செய்தி தான்.

அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் தெரியுமா? 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கீதுமோகன்தாஸ் தான். மலையாளத் திரையுலகில் இப்போது முன்னணி ஹீரோயின் இவர்.

இந்தப் படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் ஜென்சன் மற்றும் புருனோ ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் The full shebang, Waiting Room, Sixth sense, Heartless, Customs officer, Feedback, Sponge போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் உட்பட மூன்று படங்களின் தயாரிப்பில் தற்போது கமல் ஈடுபட்டிருக்கிறார்.

யாமினி

© TamilOnline.com