புறமனிதன்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புறவெளிப்பாடுதான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புறமனிதன். அதுபோலவே ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தேசியக் கருத்தைப் பெற்று விளங்குகிறது. அந்தக் கருத்து உலக நன்மைக்காகச் செயல்படுகிறது, உலகம் வாழ்வதற்கு அந்தக் கருத்து தேவை. இந்தக் கருத்தின் தேவை என்று முடிகிறதோ அன்றே அந்த நாடும் சரி, தனிமனிதனும் சரி அழிந்துவிடும். எத்தனையோ துன்பங்கள், இன்னல்கள், வறுமை, உள்ளும் புறமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை என்று கணக்கற்ற துயரங்களிலும் நாம் அழிந்துவிடாமல் இன்னமும் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் தேசியக் கருத்து ஒன்று உள்ளது, உலகிற்கு அது இன்னும் தேவைப்படுகிறது என்பது தான் அதன் பொருள். ஐரோப்பியர்களிடமும் அவர்களுக்கே உரித்தான ஒரு தேசியக் கருத்து உள்ளது, அது இல்லாமல் உலகம் நடைபெற முடியாது. அதனால்தான் அவர்களும் வலிமையுடன் விளங்குகிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் எழுதிய கிழக்கும் மேற்கும் என்ற நூலிலிருந்து.

© TamilOnline.com