கல்விக்கட்டண உயர்வு
தமிழக அரசு முதுநிலைப்பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி கற்கும் வாய்ப்பு ஏழைகளுக்கு எட்டாத கனியாகவே இருக்கப் போகிறது.

கம்ப்யூட்டர் கல்விக்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் பொருளாதார வசதியற்ற மாணவர்களின் கல்வி பறிக்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு படிப்புகளையும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விக்கான கட்டண உயர்வு மக்கள் நலஅரசு என்பதைக் கொள்கையாக அறிவித்துள்ள நம் நாட்டின் அடிப்படைக் கொள்கைக்கு மிகவும் விரோதமானது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பது நிஜம்.

துரை.மடன்

© TamilOnline.com