இன்னொரு விக்ரம்
இயக்குனர் விக்கிரமன், நடிகர் விக்ரமுக்கு பிறகு இன்னொரு விக்ரம் தமிழ் சினிமாவுக்கு வந்தாச்சு. இந்த விக்ரம் 'அலை' பட இயக்குனர். மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனின் உதவியாளராக நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் விக்ரம். தெலுங்கில் 'இஸ்டம்' படத்தை இயக்கி இயக்குனர் அந்தஸ்தை அடைந்துவிட்டவர். தற்போது தமிழில் சிலம்பரசன், த்ரிஷா, விவேக், ரகுவரன், சரண்யா என்று நடிகர் பட்டாளம் நடிக்கும் 'அலை' படத்தை இயக்குகிறார். அலை வந்தபிறகு தனக்கு தமிழில் நல்ல எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கை வைத்துள்ளார்.

அலை விக்ரமைக் கரை சேர்க்குமா?

மதுவந்தி

© TamilOnline.com