மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் நடிக்கும் 'சக்சஸ் சக்சஸ்' படத்தின் படப்பிடிப்புகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 15 இல் இப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இசக்கி சுந்தர் இ. சுப்பையா தயாரிக்கிறார்கள். சுரேஷ் பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது வெளிவந்துள்ள 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்துள்ளார். நடிகர் திலகம் குடும்பத்திலிருந்து ஒரு மக்கள் திலகம் வந்திருக்கிறான் என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குநர் சுரேஷ் பிரசன்னா.

மக்கள் திலகமா? நடிகர் திலகமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மதுவந்தி

© TamilOnline.com