தாலாட்டு பாடாத பாரதி
பாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

பாரதியைக் கண்டவுடன் "ஏண்டா பாரதி, ஏதேதோ பாட்டுப்பாடற, குழந்தை தூங்க ஒரு பாட்டுப் பாடப்படாதோ?" என்று கேட்டார்.

அதற்கு பாரதி, "தமிழர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அதனால் நான் தாலாட்டுப் பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பத் திருப்பள்ளி யெழுச்சிதான் பாடுவேன்" என்று கூறி 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' பாடினார்.

தேசிய நோக்குக் கொண்ட பாரதி பாரதமாதாவையே எழுப்பப் பாடியதில் ஆச்சர்யமில்லை. சொன்னதைச் செய்து காட்டியவர் பாரதி. கடைசிவரை தாலாட்டுப் பாடலே பாடவில்லை.

சொன்னவர்: சரஸ்வதி ராமநாதன், செயின்ட் லூயிஸ் நகரில் ஆற்றிய உரையில்.

கேட்டவர்: செ. பரிமேலழகர்

© TamilOnline.com