வேர்க்கடலை உருண்டை
தேவையான பொருட்கள்
வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 கிண்ணம்
கந்தகம் இல்லாத மொலாஸஸ் (Unsulphured Molassus) - 1 கிண்ணம்
சர்க்கரை - 4 தேக்கரண்டி

செய்முறை

அடி கனமான வாணலியில் மொலாஸஸ், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். ஒரு கிண்ணத்தில் பாதியளவு தண்ணீர் விட்டு வைக்கவும். ஒரு சொட்டு பாகை இந்தத் தண்ணீரில் விட்டு உருட்டினால் அது இறுகிய கெட்டி உருண்டைப் பதத்திற்கு வந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையைப் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

நன்றாக ஆறிய பின்பு சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும். சூடாக இருந்தால் உருண்டை பிடிக்கவராது.

(குறிப்பு: Unsulphured Molassus எல்லா அமெரிக்கன் குரோஸரி கடைகளிலும் கிடைக்கும்.)

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com