இனிப்பு வகைகள்
நவராத்திரியில் கலந்த சாதம், வடை, போளி, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் இவற்றைத் தினம் ஒன்றாகச் செய்யலாம். இந்த உணவு வகைகளின் செய்முறைகள் நமது இதழில் ஏற்கனவே வந்துள்ளன.

மாலையில் வீட்டுக்கு வருபவர்களுக்கு வைத்துக் கொடுக்கக்கூடிய சில எளிய இனிப்பு வகைகள் பற்றிப் பார்ப்போம்.

திரட்டுப்பால்

தேவையான பொருட்கள்

மில்க் மெய்ட் - 1 டப்பா
ப்ளெயின் யோகர்ட் - 1/4 கிண்ணம்
நெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

மில்க் மெய்ட், யோகர்ட், நெய் மூன்றையும் மைக்ரோவில் சமைக்கக்கூடிய ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும். மைக்ரோவினுள் வைத்து ஹை பவரில் 2 நிமிடங்கள் சமைக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் அல்லது மர கரண்டியால் கலக்கிவிட்டு மறுபடியும் மைக்ரோவில் மீடியம் பவரில் வைத்து 2 நிமிடங்கள் சமைக்கவும். திரட்டுப்பால் பதம் வரும்வரை இவ்வாறு செய்யவும்.

பின்னர் ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின்பு துண்டங்கள் செய்யலாம். இதைச் செய்வது எளிது. ஆனால் செய்யும்போது கவனமாக அருகில் இருந்து செய்யவேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com