இந்தியாவுக்காகக் கிரிக்கெட் '03
இந்திய மேம்பாட்டுக் கழகம் (the Association for India's Development) அட்லான்டா கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்தியது. இந்தியாவில் அடிப்படை வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியில் 24 அணிகள் உற்சாகமாப் பங்கேற்றன.

சிடிபாங்க், குளோபல் மால், பாலஸ் ரெஸ்டாரன்ட், சென்னை சரவணபவன், மதுரை கிச்சன், சாயிராம் ரெஸ்டாரன்ட் ஆகிய நிறுவனங்களும் திரு ரமேஷ் ஸ்ரீனிவாசனும் இந் நிகழ்ச்சிக்குப் பெரும் உதவி செய்தனர்.

நீங்கள் உங்கள் நேரம் மற்றும் பொருள் கொடுப்பதன் மூலம் தாய்நாட்டில் மேம்பாட்டுக்கு உங்கள் பங்கை ஆற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.aidindia.org/atlanta

© TamilOnline.com