நிருத்யோதயா
டாக்டர் பத்மா சுப்ரமணியம் சென்னையில் நடத்தி வரும் 'நிருத்யோதயா' நாட்டியப் பள்ளியின் மாணவிகள் ராதிகா சங்கர் மற்றும் சங்கீதா ஸ்ரீதர் விரிகுடாப் பகுதியிலும், ·ப்ளோரிடாவிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

கபர்லி அரங்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஷா ரமேஷ் பாட பிரேமா ஸ்ரீராம் நட்டுவாங்கம் செய்தார்.

இவர்கள் இருவரைத் தவிர்த்து அனைத்து இசைக் கலைஞர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ரமேஷ் பாபுவின் மிருதங்கம், கலையரசனின் வயலின் மற்றும் சுனில் குமாரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்தன.

© TamilOnline.com