சிந்துவின் நடன அரங்கேற்றம்
சான்பிரான்ஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள நாட்டியப் பள்ளியான 'அபிநயா'வின் மாணவி செல்வி சிந்து நடராஜன். இவரது நாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்டு 30ம் தேதி மாலை பாலோ ஆல்டோவின் 'Spangenberg theatre'இல் நடைபெற்றது. பிரபல மிருதங்கக் கலைஞர் நாராயணன் மற்றும் வயலின் கலைஞர் சாந்தி நாராயணன் ஆகியோரின் புதல்வி இவர். 'அபிநயா'வின் இயக்குனர் மைதிலி குமார் அவர்களிடம் பயின்ற சிந்துவின் திறமை அரங்கேற்றத்தின்போது பளிச்சிட்டது.

கர்நாடக இசைக்கலைஞரும், கவிஞருமான சிந்துவின் பாட்டனார் பி.வி. நடராஜன் எழுதிய ஒரு பாடலுக்கு, சிந்துவின் அத்தை பாடகி வசந்தி கண்ணன் இசையமைக்க, அவரது அத்தையின் மகளும், அபிநயாவில் நடனம் பயின்று வளர்ந்த இளம் நாட்டியக் கலைஞருமான ராதிகா கண்ணன் நடன அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஷா ரமேஷின் இனிய குரலும், மைதியின் விறுவிறுப்பான நட்டுவாங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றின. நாராயணன் மிருதங்கமும், சாந்தி வயலினும் வாசித்து தம் புதல்வியின் நடனத்துக்கு நல்ல பின்னணி இசை வழங்கினார்கள்.

அருணா

© TamilOnline.com