சங்கீதா அண்ணாமலை நடன அரங்கேற்றம்
குமாரி சங்கீதா அண்ணாமலையின் நடன அரங்கேற்றம் கலிபோர்னியா மாநிலத்தின் மேயர் அரங்கத்தில் சமீபத்தில் விமரிசையாக நடந்தேறியது. சங்கீதா பரதம் பயின்றது கலைமாமணி கே.ஜே. சரசா அவர்களின் சிஷ்யையான மீனாலோகன் அவர்களிடம்.

அன்றைய நிகழ்ச்சிக்கு மிருதங்கம் வாசித்தவர் தனஞ்சயன், வயலின் சீதாராம சர்மா, புல்லாங்குழல் ரஞ்சனி நரசிம்மன். பின்னால் பாடிய வித்யா பதாமிக்கும் இது அரங்கேற்றம்.

மதுரை இரா. முரளிதரன்

© TamilOnline.com