ஜேபாலாவின் சுவடுகள்
வெளிநாட்டு தமிழர்களின் முதலீடுகள் கோடம்பாக்கத்தைக் குறிவைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தன் முதலீட்டை ஒரு படமாகவே தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஜேபாலா. அமெரிக்காவில் வசிக்கும் இவர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவற்றை முறையாகப் படித்துள்ளார்.

குற்றாலத்தில் 'சுவடுகள்' என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு எல்லாமே இவர்தான். படத்தின் கதாநாயகனும் இவர்தான். மோனிகா நாயகியாக நடிக்க படத்தை விருதுபெறும் அளவுக்கு தரமாகத் தயாரித்திருக்கிறார். 'ஹேராம்' படத்திற்கு பிறகு இப்படத்தின் ஒளிப்பதிவு முழுவதும் படிப்பிடிப்புப் பகுதியிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

சுவடுகள் ஜேபாலாவிற்கு ஏணிப்படிகளாகுமா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com