மறுபடியும் சண்டியருக்குத் தடை
எந்த நேரத்தில் கமலஹாசன் சண்டியர் படப்பிடிப்பை ஆரம்பித்தாரோ தெரியவில்லை. சோதனை மேல் சோதனை வந்துக்கொண்டேயிருக்கிறது.

சண்டியர் படம் பேசப்பட்ட நாளிலிருந்தே, படத்தின் பெயர் பற்றிய பிரச்சனையை கிளப்பிவிட்டார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் படத்திற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என்று பிரச்சனையை ஆரம்பித்தார்.

பிரச்சனை முதல்வர் வரை சென்று கடைசியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஓர் இனிய நாளில் மறுபடியும் படப்பிடிப்பை கமலஹாசன் தொடங்கினார்.

மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்தமாட்டேன் என்று கமலஹாசன் ஏற்கெனவே அறிவித்ததால் இதன் படப்பிடிப்பை வத்தலகுண்டில் சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.

மறுபடியும் படப்பிடிப்பை நடத்த போலீஸார் தடைவிதித்தனர். இந்தத் தடைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கமலஹாசன் ''நாங்களாகவேதான் வத்தலகுண்டிலிருந்து வந்துவிட்டோம். அரசியலோ, மற்ற எதுவோ இதற்கு காரணம் இல்லை'' என்று கூறுகிறார்.

ஆக, சண்டியர் மறுபடியும் வீறுகொண்டு வருவாரா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com