இப்படிச் சொல்வார்களோ!
கட்டிட எஞ்ஜினியர் தன் மகனிடம்: ''டேய், சின்ன வயதிலேயே நல்லா படிச்சாத்தான், அஸ்திவாரம் பலமாக இருக்கும்.''
******

பால்காரர் தன் மகனிடம்: ''வாழ்க்கையிலே வெளுத்தது எல்லாம் பாலுன்னு நினைக்காதே.''
******

மனைவி தன் டாக்டர் கணவரிடம்: ''என்ன இருந்தாலும் உங்களுக்குக் கொழுப்பு அதிகம் - என் சமையலை கேலி பண்றதுக்கு.''
******

சமையல்காரர் தன் மகளுக்கு ஆகப்போகும் கல்யாண செலவைப்பற்றி: ''அய்யோ, நெனச்சாலே என் வயத்திலே புளியைக் கரைக்குதே.''
******

செருப்புத்தொழிலாளி: ''அய்யா, இவ்வளவு நாளா நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு என் தோலை உங்களுக்கு செருப்பா தெச்சுப்போடணும்.''
******


திருடன் பல் டாக்டரிடம்: ''ஒழுங்கா உன் பணத்தையெல்லாம் கொடுத்துடு. இல்லே உன் முப்பத்திரண்டு பல்லையும் பேத்துடுவேன்.''
******

புவியியல் நிபுணர் தனது சகாக்களிடம்: ''அய்யோ, தாமதமா வீட்டுக்கு போறேன். இன்னிக்கு என் மனைவி பிறந்த நாள் வேறே. ஒரு பூகம்பமே வீட்டிலே வெடிக்கப்போகுது.''
******

வாத்தியார் தன் மகனிடம்: ''நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே கேட்டியா? அந்தப் பசங்க கெட்டவங்க, பழகாதேன்னு...''
******


ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com