அட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம்
நவம்பர் 16ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அட்லாண்டா ஹிந்துக் கோவிலில் 'ருக்மணி தேவியை நினைவுகூர்தல்' என்ற கருத்திலான நாட்டிய நிகழ்ச்சியை அட்லாண்டா பரதநாட்டியச் சங்கம் (aabha-ஆபா) வழங்க இருக்கிறது. ருக்மணி தேவி அவர்களைப் பற்றிய திரைப்படமும் காண்பிக்கப்படும். இந்த மகத்தான கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆபா இதனை ஏற்பாடு செய்துள்ளது.

கலா§க்ஷத்திராவில் பயின்ற சவிதா விஸ்வநாதன் அவர்களது முயற்சியால் அட்லாண்டா பரத நாட்டியச் சங்கம் (ஆபா) என்னும் இலாப நோக்கமற்ற அமைப்பு தொடங்கப்பட்டது. நாட்டிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இவ்வமைப்பு சொற்பொழிவு, செய்முறை விளக்கம், பயிலரங்கம் ஆகியவை மூலமாக நடனக் கலையைப் பராமரித்துப் பிரபலப் படுத்தும். உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு தயாரித்த நிகழ்ச்சிகளையும் வழங்கும்.

அமெரிக்க மற்றும் உலக அளவிலான பல நாட்டியச் சங்கங்களுடன் தொடர்பு வைத்துள்ள ஆபாவின் நிர்வாகிகள் பின்வருமாறு: சந்திரிகா சந்திரன் (தலைவர்), பாவினி சுப்பிரமணி (உபதலைவர்), உமா புலேந்திரன் (காரியதரிசி), பிரீத்தி ஷா (பொருளாளர்), பிரீத்தா சாயி கிருஷ்ணா (நிகழ்ச்சிகள் இயக்குநர்), அனுபா தகுர்தா (உறுப்பினர்கள் இயக்குநர்), சவிதா விஸ்வநாதன் (மக்கள் தொடர்பு இயக்குநர்).

ருக்மணி தேவி நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு வாங்கவும், அதிக விவரத்திற்கும்: www.aabha.org மின்னஞ்சல் முகவரி: contact@aabha.org

© TamilOnline.com