வியாபார நோக்கில்...
வி. சேகரின் இயக்கத்தில் குடும்பப் பாங்கான கதைகளையே அதிக அளவில் தயாரித்துக் கொண்டிருந்த திருவள்ளுவர் கலைக்கூடம் இனித் தங்கள் பார்வையை வியாபார (மசாலா) நோக்கில் செலுத்தத் தயாராகிவிட்டனர். சரத்குமாரைக் கதாநாயகனாக கொண்டு 'ஏய்' என்ற படத்தை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

மேலும் சூர்யா, சிலம்பரசன், தனுஷ் என்று கதாநாயகர்களின் பட்டியல் நீண்டுபோகிறது. இந்த நாயகர்களுக்காகப் பல இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com