'பிதாமகன்' பேசப்படுமா?
'பிதாமகன்' படம் தணிக்கைக் குழுவினரால் அதிகம் பாராட்டிப் பேசப்பட்டது என்று சினிமா வாட்டாரம் சொல்கிறது. படத்திற்குப் படம் தன்னுடைய 'கெட்டப்பை' மாற்றியமைத்துக் கொள்வதில் விக்ரம் மிகவும் வித்தகர். இந்தப் படத்திலும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் சூர்யா. 'காக்க காக்க' வெற்றிக்குப் பிறகு சூர்யா சிறிது தெம்புடன் காணப்படுகிறார். கதையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். 'பிதாமகன்' விக்ரம், சூர்யா இருவரையும் முதன்முலாக இணைக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளும் தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒரு காட்சிக்கூட 'ஸ்டியோவில்' படம்பிடிக்கவில்லை என்பது சிறப்பம்சம்.

விக்ரம் சூர்யா கூட்டணி வெற்றிக் கூட்டணியா? விடை வெள்ளித்திரையில்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com