ரம்ஜான் நோன்பு
இரமலான் மாதம் வந்தது
நோன்பு கொண்டு வந்தது

இந்த மாதம் முழுவதும்
இனிய அறங்கள் செய்குவோம்

இறைத் தூதர் மகமது
இவரை எண்ணிப் போற்றுவோம்

இறை உணர்வில் முழுகியே
எளிய வாழ்க்கை வாழுவோம்

மதுரபாரதி

© TamilOnline.com