சிங்கமும் காளை மாடுகளும்
The Lion and the Bulls

Four bulls lived in a farm near a forest. The bulls had plenty of green grass to eat. The four were good friends and lived happily, helping each other.
ஒரு காட்டின் அருகில் இருந்த வயலில் நான்கு காளைமாடுகள் வசித்தன. அவற்றிற்கு அங்கு ஏராளமாகப் பசும்புல் கிடைத்தது. நான்கும் நல்ல நண்பர்களாக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தன.

One day a lion from the forest attacked the bulls. But the four friends stood against the lion unitedly, showing the lion their sharp horns! The lion had to run away, back into the forest.
காட்டுக்குள் இருந்து வந்த சிங்கம் ஒருநாள் காளைகளைத் தாக்கியது. நான்கு நண்பர்களும் ஒற்றுமையாகத் தம் கூர்மையான கொம்புகளால் எதிர்த்துப் போராடின. சிங்கம் காட்டுக்குள் திரும்பி ஓட வேண்டியதாயிற்று.

As days passed the four bulls began to quarrel among themselves. Each bull went its way. The lion noticed the disunity among the bulls.
சிறிது நாள் கழிந்தது. நான்கு காளைகளும் தமக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு தனித்தனியாகப் பிரிந்தன. மாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததைச் சிங்கம் கவனித்தது.

One day, it sprang upon a lonely bull and ate him up. The other bulls did not care to help that bull. This way, the lion ate up all the four bulls one after another.
ஒருநாள் தனித்திருந்த காளை மீது சிங்கம் பாய்ந்து அதை அடித்துத் தின்றது. மற்றக் காளைகள் அதைக் காப்பாற்ற வரவில்லை. இப்படி, ஒன்றன் பின் ஒன்றாக எல்லாக் காளை களையும் சிங்கம் கொன்று தின்றுவிட்டது.

Unity is strength!
ஒற்றுமையே வலிமை!

© TamilOnline.com