ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
மே 13, 2007 அன்று ஹூஸ்டன் பாரதி கலை மன்றமும், சம்ஸ்கிருதி நாட்டிய கலைக்கழகமும் இணைந்து வழங்கிய சென்னை பார்வதி ரவி கண்டசாலா மற்றும் கலாபிரதர்ஷினி குழுவினரின் அபிராமி அந்தாதி நாட்டிய நாடக வினோதம் எனும் நடன விருந்து மிக அற்புதமாக இருந்தது. அதனை அடுத்து வந்த கணேஷ்-குமரேஷ் வயலின் இசை கேட்டோரை மகிழ்வித்தது. இவ்விரு நிகழ்ச்சிகளும் ஹூஸ்டன் டவுண்டவுன் சில்கா ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில்கா ஹாலில் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய இசைநிகழ்ச்சி என்பதால் இசை விருந்தைப் பருக ஏதுவான அரங்கமாக அமையப்பெற்றது என அனைவராலும் பாராட்டப்பட்டது.

கரு. மாணிக்கவாசகம்

© TamilOnline.com