தொல்லைபேசி
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

செல்பேசி காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. தொலைபேசியால் சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகள் உருவாகின்றன என்பதை மையக் கருத்தாக கொண்டு புளூவாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் 'தொல்லைபேசி' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

நாயகன் விக்ரமாதித்யா, நாயகி பிரியங்கா. 'பூவே பூச்சூடவா' போன்ற படங்களைத் தயாரித்த இயக்குநர் பாசிலின் பாசறையில் பணியாற்றிய பன்னீர் செல்வம் 'தொல்லைபேசி'யின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். ஆர்த்தி, நிழல்கள் ரவி, கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வளர்ந்து வரும் இப்படத்தின் இசையை கவனிக்கிறார் எஸ்.டி. ஷாந்தகுமார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com