வேல் கொண்ட சூர்யா
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

காக்க காக்க, கஜினி, ஆறு ஆகிய அதிரடிப் படங்களைத் தொடர்ந்து மாறுபட்ட இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் 'வேல்'.

அசின் இந்தப் படத்தில் அவரது ஜோடி. வடிவேல், நாசர், சரண்ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை யுவன்சங்கர்ராஜா. ஒளிப்பதிவு ப்ரியன். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் ஹரி.

சாமி, ஐயா, ஆறு, தாமிரபரணி ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கும் படம் இது. அரிவாள்களால் சாதிக்க முடியாத விஷயத்தை அறிவால் சாதிக்க முடியும் என்பதே கதைக் கருவாம். தேவையான கருத்துத்தான்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com