கணிதப்புதிர்கள்
1. 10 குரங்குகள் 10 வாழைப்பழத்தைத் தின்ன 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. அப்படி என்றால் 5 குரங்குகள் 5 வாழைப்பழத்தைத் தின்ன எவ்வளவு நேரம் ஆகும்.? எத்தனை குரங்குகள் 60 பழங்களை 60 நிமிடத்தில் உண்ணும்?

2. சங்கர் தன்னிடமுள்ள டாலர் தொகையில் பாதியைத் தனது சொந்த உபயோகித்திற்கு வீட்டில் வைத்துவிட்டு மீதியைச் செலவழிக்க முற்படுகின்றான். முதலில் 1 டாலரை தோட்டக்காரனுக்குக் கொடுக்கின்றான். மீதி இருப்பதில் பாதிக்கு உணவகத்தில் சாப்பிடுகின்றான். அங்கு 2 டாலர் டிப்ஸ் கொடுக்கிறான். மீதி இருப்பதில் பாதியை புத்தகம் வாங்கச் செலவழிகின்றான். எஞ்சியதில் 3 டாலரை கோயில் உண்டியலில் செலுத்தி விடுகின்றான். இப்பொழுது அவன் கையில் மீதம் 1 டாலர் மட்டுமே உள்ளது. அப்படியானால் முதலில் அவனிடம் இருந்த மொத்தத் தொகை என்ன?

3. சர்மா என்பவருக்கு மூன்று பெண்கள். அதில் ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அப்படியென்றால் அக்குடும்பத்தில் உள்ள மொத்த ஆண்களின் எண்ணிக்கை என்ன?

4. A என்பவர் Bயின் மகள். B,C இருவரும் சகோதரிகள். Cயின் தாய் D. Dயின் மகன் E. Eயின் மகன் X. என்றால் Xக்கு A என்ன உறவு?

5. ராமுவின் வீட்டில் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் இருக்கிறது. அது நான்கு மணி அடிப்பதற்கு மூன்று விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. அப்படியானால் பதினோரு மணி அடிப்பதற்கு எத்தனை விநாடிகளாகும்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com