ரஜினியின் அடுத்த படம்?
ரஜினி ரசிகர்கள் 'தலைவரின் அடுத்த படம் எப்போது?' என்று காத்திருக்கும் வேளையில் கோடம்பாக்கத்தில் அதைப் பற்றிய ஒரு செய்தி கசிந்து வருகிறது. ரஜினியின் புதிய படத்தை ஹரி இயக்குகிறார் என்பதுதான் அது. கோடம்பாக்கம் வட்டாரங்கள் இதை உறுதி செய்கிறது.

அதுமட்டுமல்ல இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் ஏப்ரலில் தொடங்கும் என்றும் இரண்டுவிதமான பேச்சு அடிபடுகிறது.

எல்லாம் சரி, இதுபற்றி எந்தத் தகவலும் இதுவரை ரஜினிகாந்த் அல்லது அவரை நெருங்கிய வட்டாரங்கள் மூலமாக வெளிவரவில்லை.

இதோ அரசியலுக்கு வருகிறார் என்று ரஜினியைப் பற்றிச் செய்திகள்போல் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்தியும் வெறும் யூகங்கள்தானா?

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com