தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம்
ஊழலுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். ஊழல் இல்லாத துறையே தற்போது இல்லை. குறிப்பாக, கல்வித்துறையில் மிக அதிகமாக ஊழல் உள்ளது.

நீதிமன்றத்தில் தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம் ஆகிறது. ஊழலைக் களைவதில் மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு

விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.

ஊழல் வழக்குகளை இருவிதமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ரூ. 5 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ளவை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமானவை எனப் பிரிக்கலாம்.

மோகன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவில்.

******


நான் 14 ஆண்டுகளாகத் தனியாக இருக்கிறேன். தனியாக இருந்தால் தான் என்னுடைய கலை வளரும் என எனக்குள்ளே ஒரு குரல் ஒலிக்கிறது.

என் கலையைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். ஒரு பெண் தனியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதே போல் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தைகளைக் கரைசேர்க்க

எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதும் தெரியும். எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் பெண்களுக்கு மணவாழ்வில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள்.

நாகரிகமானவர்கள் கூட சிலவற்றை ஏற்பது இல்லை.

அனிதா ரத்னம், பரதநாட்டியக் கலைஞர், விவகாரத்து ஆனவர்கள், விதவைகளுக்கான நவீன சுயம்வரத்தில்.

******


'சண்டியர்' படப் பிரச்சனையில் அரசு உதவியை நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் தனியாகப் போராட முடியும். எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.

சினிமாத் துறையினரின் உதவியையும் கேட்கவில்லை. ஹே ராம் படத்துக்கு ஒரு மாதம் தணிக்கை நடைபெற்றது. அதற்கும்தான் பிரச்சனை ஏற்பட்டது.

போலீஸ¤க்கு அடுத்து மக்களை அமைதியாக வைத்திருக்கிறது சினிமா. ஆத்திகத்துக்கு அடுத்தது சினிமா. அதற்கு வரி விதிக்கக்கூடாது.

மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டேன் இருந்தாலும் கூறுகிறேன். எந்த மொழியும் நமக்கு உகந்ததே. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். சீனமொழியைக்கூட கற்கலாம். மொழி தேவையில்லை

என்று கூறினால் அது அரசியல் விளையாட்டு. அறிவுரை சொல்வது எளிது. ஆனால் அது எனக்குப் பிடிக்காது.

நடிகர் கமல்ஹாசன், தன் 49வது பிறந்தநாள் விழாவில்.

******


கடந்த 10 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் யாரும், சீர்திருத்தம் மந்தமாக உள்ளது என கூறமுடியாது.

10 ஆண்டுகளுக்கு முன் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு வறட்சிக்குப் பின்னரும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4

சதவீதத்துக்குக்கும் அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு 7 சதவீத உற்பத்தியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 4 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நிலை இருந்ததில்லை.

ஊரகப் பகுதிகளில் விவசாயம், மின்சாரம் அளிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு

குறைவு என்று கூற முடியாது.

பிரதமர் வாஜ்பாய், லண்டனிலிருந்து வெளியாகும் '·பைனான்சியல் டைம்ஸ¤'க்கு அளித்த பேட்டியில்.

******


முழுவதும் கற்பனையாக எழுதுகிற எந்தப் படைப்பும் முழுமையான அங்கீகாரத்தை, ஈர்ப்பை வாசிப்பவர்களிடம் ஏற்படுத்திவிட முடியாது என்பது எனது கருத்து. நான் பார்க்கின்ற மனிதர்கள்,

அவர்களின் வாழ்வு, பிரச்சினைகள் யதார்த்தமாக எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். நிஜங்களில் இருந்து விலகிச் சென்று என்னால் எழுத முடியாது.

உஷாசுப்பிரமணியம், எழுத்தாளர், பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

******

© TamilOnline.com