விஜய் திரிஷா ஜோடி சேரும் 'கில்லி'
'தில்', 'தூள்' படங்களுக்குப் பின் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது 'கில்லி'. தெலுங்கில் மிகவும் பிரமாதமாக பேசப்பட்ட, ஓடிய 'ஒக்காடு' என்கிற படமே 'கில்லி'. இப்படத்திற்காக விஜய்யும், திரிஷாவும் இணைகிறார்கள்.

தூள் படத்தில் அப்படியே செட் போட்டு திருவல்லிகேணியைத் திரைக்குக் கொண்டு வந்தது போல், இந்தப் படத்தில் சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளைப் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கலை இயக்குநர் மணிராஜ் தலைமையில் 250 பணியாளர்கள் மகாபலிபுரம் அருகே வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, நாகேந்திர பிரசாத், மயில்சாமி, சாப்ளின் பாலு, பிரமானந்தம் என்று ஒரே நட்சத்திரக்கூட்டம்.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை வித்யா சாகர், ஒளிப்பதிவு கோபிநாத், வசனம் பரதன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com